Friday 3rd of May 2024 08:00:39 AM GMT

LANGUAGE - TAMIL
-
உலகில் முதல் கொரோனா தடுப்பு மருந்தை  அறிமுகப்படுத்தத் தயாராகிறது இந்தியா!

உலகில் முதல் கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தத் தயாராகிறது இந்தியா!


இந்தியாவின் கோவாக்ஸின் கொரோனா வைரஸ் தடுப்பூசி எதிா்வரும் வரும் 7-ஆம் திகதி மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ள நிலையில், இதில் வெற்றிபெற்றால் உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசியை ஆகஸ்ட் 15-ஆம் திகதி அறிமுகப்படுத்த இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ICMR) திட்டமிட்டுள்ளது.

இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வு நிறுவனம் (NIV) ஆகியவற்றுடன் இணைந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் கொரோனா வைரஸுக்கு எதிரான பரிசோதனையில் உள்ள தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

கோவாக்ஸின் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்து கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொரோனா தடுப்பூசியின் மனிதப் பரிசோதனைக்கு முந்தைய பரிசோதனைகள் அனைத்தையும் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதனையடுத்தே இரு கட்டங்களாக மனிதர்களுக்கு இந்த மருந்தைச் செலுத்தி பரிசோதிக்க பாரத் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்துக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் இந்த மருந்து மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கும் முயற்சி வரும் 7-ஆம் திகதி இரு கட்டங்களாக ஆரம்பிக்கப்பட உள்ளது.

இந்தப் பரிசோதனை முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பரிசோதனை வெற்றியடைந்தால் ஆகஸ்ட் 15-ஆம் திகதிக்குள் தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் பாரத் உயிரியல் ஆய்வு நிறுவனத்துக்கு இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழக பணிப்பாளா் பல்ராம் பார்கவா கடிதம் எழுதியுள்ளாா்.

கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் தடுப்பு மருந்து கோவாக்ஸின் திட்டத்தை மத்திய அரசின் உயர்மட்டத்தில் உள்ள பல்வேறு துறைகள் இணைந்து கண்காணித்து வருகின்றன.

இந்தத் தடுப்பு மருந்து மனித பரிசோதனைக்கு முந்தைய அனைத்துப் பரிசோதனைகளிலும் வெற்றிபெற்றுள்ளது எனவும் அந்தக் கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் திட்டத்தில் 12 நிறுவனங்களை மிக விரைவாகப் பணிகளைச் செய்யக் கோரி இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மக்களுக்கு அவசரமாக கொரோனா தடுப்பு மருந்து தேவைப்படுவதால், பாரத் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்த மருந்தை மனிதா்களுக்குச் செலுத்திப் பரிசோதனை செய்ய விரைவாக அனுமதி வழங்கப்பட்டது.

ஆதலால் எந்தவிதமான தாமதமும் இன்றி, ஜூலை 7-ஆம் திகதிக்குள் மனிதப் பரிசோதனையைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.

இந்தப் பரிசோதனையின் முடிவுகள் வெற்றிகரமாக அமைந்தால் எதிா்வரும் ஆகஸ்ட் 15-ஆம் திகதிக்குள் மருந்தின் முடிவுகளை அறிவித்து அன்றே பயன்பாட்டுக்குக் கொண்டுவர இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் திட்டமிட்டுள்ளது எனவும் அதன் பணிப்பாளர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE